எங்கள் வீட்டில் எனக்கு அடிக்கடி சொல்லப்படும் கதைகளில் இதுவும் ஒன்று. நான் பிறந்த போது மருத்துவமனையில் இருந்த அனைத்து நர்ஸ்களும் என்னை பாசமாக கொஞ்சியதாகவும், அதன் பிறகு எங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் அங்கு சென்ற போது அவர்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சொல்வார்கள். இதை முதன்முறையாக நான் கேட்ட போது இதில் இருந்த கற்பனைத் தன்மையை ஆராய என் மனம் முன்வரவில்லை. அன்றிலிருந்தே முகம் தெரியாத அவர்களின் அன்பை எண்ணி எனக்கு நானே சிலிர்த்துக் கொள்வேன். எனக்கு நர்ஸ் என்றாலே ஒரு விவரிக்க முடியாத ...
தாத்தா இறந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. அவரின் மரணச் செய்தி வந்த கணத்திலிருந்து நான் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று என்னாலே உணர முடியவில்லை. ஆழ்ந்த துயரமோ அடக்க முடியாத அழுகையோ இல்லை. ஆனாலும் ஒரு விதமான இறுக்கமான மனநிலை. அவரை அடக்கம் செய்த அன்று இரவே கூட சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியின் இழப்பை எண்ணி சற்று நேரம் அழுது கொண்டிருந்தேன்.அவர் என்னைப் பாசமாக கொஞ்சியதாகவோ கடுமையாக திட்டியதாகவோ எனக்கு நினைவு இல்லை. எந்த விதமான உணர்வுகளையும் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக்கொள்ளாத, தன்னை ...
பரியேறும் பெருமாள் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரியும். கறுப்பியை தண்டவாளத்தில் கட்டி வைக்கும் முதல் காட்சியில் திரையில் மட்டுமின்றி அதை தாண்டியும் நம்முள் ஒரு விதமான பதைபதைப்பு நிறைந்திருக்கும். அதே மனநிலை மாரி செல்வராஜ் எழுதிய "அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்" என்ற சிறுகதையை படிக்கும் போதும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு நாயின் பார்வையில் அதன் வாழ்வை பார்க்க நேரிட்டால் அது அப்படி தான் இருக்க முடியும் என்று நம்மை நம்ப செய்து விடுகிறது. சாதாரணமாகவே நாய் என்ற சொல்லை ...