இரவு 9:30 மணி யுவன் இசையைப் போன்ற எனெர்ஜியும், ஸ்ரீ காந்த் தேவா வின் இசையைப் போன்ற இரைச்சலும் ஒரு சேர நிறைந்த பெங்களுரு பேருந்து நிலையத்தில் சத்யா தன் தோழியின் அண்ணன் அமுதனுடன் எலெக்ட்ரானிக் சிட்டி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டிருந்தாள். அதற்கு போகும் வழியில் தான் சத்யாவின் ஹாஸ்டலும் கூட.ஒரு தோழியின் திருமணத்திற்காக வந்திருந்த அமுதனை விருந்தோம்ப வேண்டிய சூழல் சத்யாவிற்கு, அதை அவனை சேலத்திற்கு பேருந்து ஏற்றி விடும் வரையில் கடமையாய் செய்து முடிக்க சபதம் ஏற்றிருந்தாள். அதற்காக ஹீரோயினை பத்திரமாக ...
இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸாய் அவள் சிகை, படர்ந்து விரிந்த வாழைக்காய் பஜ்ஜியாய் அவள் நெற்றி, ஜீராவில் ஊறிய குலாப் ஜாமுனாய் அவள் கண்கள், பார்த்த உடன் ஈர்க்கும் மிளகாய் பஜ்ஜியாய் அவள் மூக்கு, பிய்த்து திங்க தூண்டும் கிரீம் பன்னாய் அவள் கன்னங்கள், இனிமை தெறிக்கும் பலாச்சுளையாய் அவள் இதழ்கள், எண்ணிலடங்கா வாழைத்தண்டு பொரியலாய் அவள் பற்கள், மெலிதான உருளைக்கிழங்கு சிப்ஸாய் அவள் புன்னகை, கடித்தவுடன் கரையும் பிஷ் பிங்கராய் அவள் விரல்கள், கடிக்க முடியாத பக்கோடாவாய் அவள் மனம், செரிக்காத ...
தம்பி , என்ன ஆளுங்க நீங்க ?"எட்டு திக்கும் எதிர்ப்படும் வழக்கமான கேள்வி தான் இது. ஆனால், கேட்பவர்கள் அனைவரும் என்னை விட வயதில் பெரியவர்களாதலால் பொது நாகரிகம் கருதி அவர்களை அசிங்கமாக பேச முடியாத கையறு நிலையில் இக்கட்டுரை எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். 'எல்லாரும் கேக்கற சாதாரண கேள்வி தானே, இதுல பதில் சொல்றதுக்கு என்ன பிரச்சன ?' என்று என்னை வினவ அனைவருக்கும் அனுமதி உண்டு. 'உன் பேர் என்ன ?' என்ற கேள்வியைப் போல் 'நீ எந்த ஜாதி ?' என்கிற கேள்வியும் சாதாரணமாகி போனதென்னவோ உண்மை தான். ஆனால், ...