பெண்களைப் பற்றிய படம் அல்லது பெண்களை சுற்றிய படம் என்றாலே நம்மூரில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விடலாம். ஜோதிகா நடித்தால் ஒரு குடும்பப் பெண்ணின் போராட்டம், நயன்தாரா நடித்தால் திகில் நிறைந்த பேயாட்டம், மற்ற மசாலா படங்களில் வரும் நாயகிகளுக்கு காதலினால் வரும் ஆர்ப்பாட்டம். இவ்வளவு தான் நம் சினிமா. இதையும் தாண்டி சில படங்கள் ஸ்டீரியோடைப்புகளை உடைத்துவிட்டு வந்து கொண்டு தான் இருக்கின்றன. ...