"ஜனனமும் பூமியில் புதியது இல்லைமரணத்தைப் போலொரு பழையதும் இல்லைஇரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லைஇயற்கையின் ஆணை தான் ஞானத்தின் எல்லை..."என்று வைரமுத்துவின் வரிகள் சோகக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, மின் மயானம் முழுவதும் அழுகைக் குரல்கள் நிறைந்திருந்தன. அதில் ஒருவனின் ஓலக்குரல் மட்டும் தனியாக ஒலித்துக் கொண்டிருந்தது. இறந்து போன சிவகாமி பாட்டியின் பேரன் ராகவ் மூச்சடைக்க விசும்பிக் கொண்டிருந்தான். பிறக்கும்போது இவனை அள்ளி அணைத்த கைகள், அனலின் கைகளுக்கு இரையாவதை பார்த்த பின் எப்போதும் கட்டுக்குள் ...