அன்புள்ள பேனாவிற்கு , உன்னிடம் கொடுக்க நினைப்பது ஓர் நன்றி , கேட்க நினைப்பது ஓர் மன்னிப்பு. "நன்றி மறப்பது நன்றன்று " என்று என் நாவில் உதிப்பதற்கு முன், என் கண்ணில் உதிக்க வைத்ததையே காரணமாகக் கொண்டு இந்த நன்றி. என்னை நான் வெளிக்கொணர உன்னை பயன்படுத்திக் கொண்ட என் சுயநலத்திற்கு துணை போன உனக்கு இந்நன்றி. எண்ணங்கள் யாவும் ஆழம் நிறைந்த ஓர் பாதை . அதில் என் நாவையும் மீறி தொலை தூரம் பயணம் செய்ததற்கு இந்நன்றி. என் உள்ளம் கேட்ட அனைத்தையும் கொடுத்த நீ , நான் கேட்கும் மன்னிப்பை கொடுக்கமாட்டாயா ...