3

100 ரூபாய் நோட்டு

posted on , by loges

ஒரு மரணச் செய்தி புதைந்து கிடைக்கும் எத்தனையோ நினைவுகளை எழுப்பி விடுகிறது.இன்று நெருங்கிய நண்பன் ஒருவனின் தந்தை இறந்த செய்தி வந்தது. கல்லூரி முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். இந்த 10 ஆண்டுகளில் நானும் என் நண்பனும் சந்தித்துக் கொண்டதே சில முறை தான். அவனது தந்தையை கல்லூரி படிக்கும்போது இரண்டொரு முறை சந்தித்திருக்கிறேன். கடைசியாக அவனது திருமண விழாவில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. ...

1

கடவுள் இருக்கிறாரா?

posted on , by loges

"கடவுள் இருக்கிறாரா?"இக்கேள்வியை நான் பள்ளியில் படிக்கும் சமயத்தில் கேட்டிருந்தால், கண்டிப்பாக இருக்கிறார் என்றிருப்பேன். இதே சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் இல்லவே இல்லை என்று சண்டைக்கு கூட வந்திருப்பேன். 'சரி, இப்போ என்ன தான் டா சொல்ற?' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. அதை தெரிந்து கொள்ள நாம் சில வருடங்கள் பின் நோக்கியும், மைசூரை நோக்கியும் செல்ல வேண்டும். குத்துமதிப்பாக 5 ஆண்டுகள்.என் தங்கை கல்லூரி முடிந்த கையுடன் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர மைசூர் வர சொல்லியிருந்தார்கள். ...

0

Warmth in the downpour

posted on , by loges

For some reason, I always thought that the trek and rain can’t go together. This trip smacked me hard in the head to make me realise that isn’t true. We always worry about the rain being the spoiler for any trip. Ironically or let’s just say true to its nature, rain made this trip really special.I have already been to Kodachadri several years back in the month of December. But, I read a ...

0

The 2 postcards

posted on , by loges

“What is it with him? He won’t reply to messages. He won’t attend calls regularly and won’t even bother calling us back. But, he wants to send postcards as if he is a social animal.” This is what so many people who know me well would have thought  when I said I wanted to send postcards to people I know. Even I would have thought the same if I were in their place. Thanks to the social ...

0

தேவதைகள்

posted on , by loges

 எங்கள் வீட்டில் எனக்கு அடிக்கடி சொல்லப்படும் கதைகளில் இதுவும் ஒன்று. நான் பிறந்த போது மருத்துவமனையில் இருந்த அனைத்து நர்ஸ்களும் என்னை பாசமாக கொஞ்சியதாகவும், அதன் பிறகு எங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் அங்கு சென்ற போது அவர்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சொல்வார்கள். இதை முதன்முறையாக நான் கேட்ட போது இதில் இருந்த கற்பனைத் தன்மையை ஆராய என் மனம் முன்வரவில்லை. அன்றிலிருந்தே முகம் தெரியாத அவர்களின் அன்பை எண்ணி எனக்கு நானே சிலிர்த்துக் கொள்வேன். எனக்கு நர்ஸ் என்றாலே ஒரு விவரிக்க முடியாத ...

0

தாத்தா சென்றார்

posted on , by loges

 தாத்தா இறந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. அவரின் மரணச் செய்தி வந்த கணத்திலிருந்து நான் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று என்னாலே உணர முடியவில்லை. ஆழ்ந்த துயரமோ அடக்க முடியாத அழுகையோ இல்லை. ஆனாலும் ஒரு விதமான இறுக்கமான மனநிலை. அவரை அடக்கம் செய்த அன்று இரவே கூட சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியின் இழப்பை எண்ணி சற்று நேரம் அழுது கொண்டிருந்தேன்.அவர் என்னைப் பாசமாக கொஞ்சியதாகவோ கடுமையாக திட்டியதாகவோ எனக்கு நினைவு இல்லை. எந்த விதமான உணர்வுகளையும் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக்கொள்ளாத, தன்னை ...

0

நாயே!

posted on , by loges

பரியேறும் பெருமாள் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரியும். கறுப்பியை தண்டவாளத்தில் கட்டி வைக்கும் முதல் காட்சியில் திரையில் மட்டுமின்றி அதை தாண்டியும் நம்முள் ஒரு விதமான பதைபதைப்பு நிறைந்திருக்கும். அதே மனநிலை மாரி செல்வராஜ் எழுதிய "அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்" என்ற சிறுகதையை படிக்கும் போதும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு நாயின் பார்வையில் அதன் வாழ்வை பார்க்க நேரிட்டால் அது அப்படி தான் இருக்க முடியும் என்று நம்மை நம்ப செய்து விடுகிறது. சாதாரணமாகவே  நாய் என்ற சொல்லை ...