Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts
இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸாய் அவள் சிகை,

படர்ந்து விரிந்த வாழைக்காய் பஜ்ஜியாய் அவள் நெற்றி,

ஜீராவில் ஊறிய குலாப் ஜாமுனாய் அவள் கண்கள்,

பார்த்த உடன் ஈர்க்கும் மிளகாய் பஜ்ஜியாய் அவள் மூக்கு,

பிய்த்து திங்க தூண்டும் கிரீம் பன்னாய் அவள் கன்னங்கள்,

இனிமை தெறிக்கும் பலாச்சுளையாய் அவள் இதழ்கள்,

எண்ணிலடங்கா வாழைத்தண்டு பொரியலாய் அவள் பற்கள், 

மெலிதான உருளைக்கிழங்கு சிப்ஸாய் அவள் புன்னகை,

கடித்தவுடன் கரையும் பிஷ் பிங்கராய் அவள் விரல்கள்,

கடிக்க முடியாத பக்கோடாவாய் அவள் மனம்,

செரிக்காத பரோட்டவாய் அவள் நினைவுகள்,

அறுசுவை இருந்தும் அருந்த முடியாத அன்னக்காவடியாய் நான் ...!
She was there to welcome me to this world,
As a Doctor...
She was there to give me first touch of pain,
As a Nurse...
She was there to give me first touch of care,
As an Aunt...
She was there to give me first piece of Advice,
As a Grandma...
She was there to share me the only piece of chocolate,
As a Sister...
She was there to stimulate my boyish hormones,
As an Actress...
She was there to take out my first blush,
As a Crush...
She was there to give a free advice in every single decision of mine,
As a neighbourhood Aunt...
She was there to share my good and bad in the same way,
As a Friend...
She was there to make me What I am and Who I am today,
As a Mother...
She is a Woman.
She is like air everywhere around you to shape you up.
Happy Women's day..smile emoticon
PS: Some of them stated above should be in present tense and plural as well..smile emoticon
விடுதி வரமா சாபமா எனும்
விடுகதைக்கு கிடைத்த விடையானவன்...
தனிமையும் நானும் தத்தளிக்கையில்
தன்னையும் இணைத்து தித்திப்பை தந்தவன்...
பயில்வதற்கு பங்காளியாய் பலர்
பாடத்தை விடுத்த படங்களுக்கு பலனாய் இவன்...
அன்பை வெளிநீட்டிக் கொள்ளாதவனாய் அவையில்
ஆபத்தென்றால் அலறி வருவான் நடு்சாமத்திற்கும் இடையில்...
ஒரே தட்டில் ஒன்றியவர்களும் ஒன்றமுடியாமல் போக
இன்றியமையாதவனாய் இன்றும் இவன்...
பதில்களுக்கு கேள்வியாய் என் கேள்விகளுக்கு பதிலாய்...
உணர்ச்சிகளின் வசப்படாமல் வசப்படுத்தும் வல்லவனாய் இவன்...
அவ்வளவு நல்லவனா இவன்...?
கீ கொடுக்கும் பொம்மைக்கும் தமக்கும் ஏழு வித்தியாசங்கள் எண்ண முடியுமோ... குழப்பத்தில் கீ-போர்‌டில் சிக்கிய பொம்மையாக பட்டதாரிகள் !
அன்று.... லீவு கிடைத்தால் உறவினர் வீட்டிற்கு.... இன்று.. லீவு கிடைத்தால் உறவினராக வீட்டிற்கு...
பட்டாம்பூச்சியாய் மனம்... பட்டம் ஒரு வாயில்லா பூச்சி என்பதை மறந்து...! - பட்டமளிப்பு விழா
உலகின் தலைசிறந்த கதாசிரியர்கள் அப்பாக்களே... வடை திருடுவதை காக்கை கைவிடும்வரை......
கவலைக்கிடமான தோசையும் கலங்கமே ஆன சட்னியும் கூட கலகலப்பாக்கும்... ஒரே தட்டில் ஒன்றியவனின் உரையாடல் இருந்தால்...
துக்கமற்ற துயரமற்ற சிசுவின் உறைவிடம்
அது அன்பின் மறைவிடம்..!
சிசுவும் உணரும் அன்பின் பெருமை
அதுவே அவ்வறையின் அருமை...!
அறை முழுவதிலும் பரிசுத்தம்
இதுதான் இவ்வுலகின் சித்தம்..
அங்கு சிறிதளவும் இல்லை சத்தம்
அன்பும் அரவணைப்பும் தான் அதன் அர்த்தம்..!
உலகின் பார்வையில் அது இருளறை
உண்மையில் ஒளி வாய்ந்த அருளறை..
உலகம் போற்றும் சிறுவறை
அது நம் தாயின் கருவறை..!
நேற்று கருவறையில் வாழ்ந்த புனிதர்கள்
இன்றைய உலகின் மனிதர்கள்..!
அழுக்காறு அவா வெகுளி எனும் படை
புனிதத்திற்கு போட்டது தடை..!
புனிதம் நமது உடைமை
காப்பது நம் கடமை..!
நம்பிக்கையை மட்டும் சிந்தையில் வை,
மற்றதை நல்வழியில் செய்..
அகற்றும் மனதிலிருக்கும் கறை,
உலகம் ஆகும் கருவறை...!